Monday, 26 December 2016

என்னவென்று எழுத? என்னை ஈன்றோரே!!!

என்னவென்று எழுத?
என்னை உலகத்தில் அறிமுகம் செய்த என்  கடவுளுக்கு!!!

கருவறையில் கழித்திட்ட நாட்கள்,
அவள் என்னை தாலாட்டி சீராட்டி வளர்த்த நாட்களுக்கு ஒப்பானவையே!!!

தாயே,
கருவறையில் உன்னை உதைத்து இன்பமுற செய்து,
தவழ்ந்து தடுமாறி எழுந்து நடமாடி உன்னை உவகை பூக்க!!!

தாயும் தந்தையும் என் ஆசானே,
உலகை காட்டி  என்னை ஊக்கமளித்து,
என்னவென்று சொல்ல என்னை ஈன்றோரே !!!

கவிதையில் வரைக்க கூட,
என் மொழிக்குள் அடங்காமல் வார்த்தை தடுமாற,
என்னவென்று சொல்ல என்னை ஈன்றோரே!!!

வாழ்க்கை என்னும் பாதையில் திசைதெரியாது தத்தளித்த பொழுது
என்னுடைய நட்பாய் என்னை வழிப்படுத்தியதை எழுதுவதா?
என்னவென்று சொல்ல என்னை ஈன்றோரே!!!

வேறு ஏதாவது எழுத சொன்னால் கூட கவிப்பேரகை படைத்திருப்பேனோ?
எம்மை ஈன்ற உம்மை எழுத எனக்கு என்ன அருகதை?
என்னவென்று சொல்ல என்னை ஈன்றோரே!!!

பரிதவித்து பேதளித்த நாட்களில், என்னுள் கரைந்து,
என்னை உயிர்வித்த உங்களை,
இந்த கவிதையில் வரைமுறைக்க வார்த்தைகள் எழவில்லை.
என்னவென்று சொல்ல என்னை ஈன்றோரே!!!

வானத்தில் வட்டமிட,
ஆசைகள் திமிற உங்களை உதாசீனப்படுத்திய நாட்கள்,
நான் தகப்பனாய் இன்று உங்களை...
என்னவென்று சொல்ல என்னை ஈன்றோரே!!!

என்றும், எப்பொழுதும் என்னுடைய நினைவாய் இருக்கும் உங்களை...
திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்று வந்ததை எழுதவா?
என்னவென்று சொல்ல என்னை ஈன்றோரே!!!

கல்வியும், செல்வமும் எனக்களித்து , வாழ்க்கையும் கொடுத்து
என்னை உலகில் வலமிட செய்த நீங்களோ வாழ்க்கையின் அந்தியில் எங்கோ?
என்னவென்று எழுத என்னை ஈன்றோரே?
வார்த்தை எழவில்லை, விடைபெறுகின்றேன்!!!

6 comments: