Thursday, 10 May 2012

வலி இனிமையானது!

விண்ணிலே முளைத்திடும் நட்சத்திரங்களே!

இந்த மனதின் வலிகள் நட்சத்திரங்களே!
கண்ணிலே கருவிழி தனைக் காட்டி கயல்விழியாள் மீட்ட,
என்னுள்ளே எழும் ராகங்கள் நட்சத்திரங்களே!
இந்த மனதின் வலிகள் நட்சத்திரங்களே!


காவியம் இயற்றிய பெரும் கவிஞர்களுக்கு நடுவே,
இந்த மானுடனை சிறு கவிஞனாக்கி மகிழ்கின்றாயோ?
எங்கோ வீசிய தமிழ்த் தென்றல்,
என் மனதோடு இயல், இசை, நாடகம் இயற்ற எம் இறைவன் உன்னை பணித்தானோ?


கார்முகிலே! நான் சூரியன்!
எட்டாத உயரத்தில் என்னை யார் தொட்டுவிடப் போகிறார்கள் என்று இறுமாப்பு கொண்டிருந்தேன்!
என்னோ என் மடந்தை?
இலகுவாக கண் இமை மூடுவதுப் போல், கார்முகிலே நீ சூரியனை அரவணைத்து விட்டாய்!


நிலவும் நீயும் ஒன்றா?
நிலவு சுட்டதில்லை, நீயோ சுடுகின்றாய்?
எப்படி நீயும் நிலவும் ஒன்றாவீர்கள்?
உன்னைக் காண்பது கவி இன்பம்,
கவிகளின் இன்பம் கற்பனையிலே.
 
காற்றும் நீயும் ஒன்றே!

காற்று இல்லையேல் மானுடம் இல்லை!
மெல்லிய மனதோடு சுவாசமாய்,
தெல்லியத் தென்றலாய்,
பெரும் புயலாவும்,
நீ பல கோலங்கள் பூனுவதால், காற்றும் நீயும் ஒன்றே!
 
குளிரும் நீயோ?

தேகத்தின் உணர்வு குளிர்,
ஆனால் உனது விழியின் வழியே நிரம்புவது என்ன?
உன்னைக் காணும் பொழுது மனது குளிர்கின்றதே!

நீரும் நீயும் ஒன்றா?

நீரின்றி மனிதன் சில நாட்கள் வாழலாம்,
நீயின்றி நான் வாழலாகாது!
பின் நீயும் நீரும் ஒன்றல்லவே!
 
மனதின் வலிகள் பல,

வலி என்பது கொடுமை என்று யார் சொன்னார்கள்?
இதுவும் இனிமை தான்!
வலி இல்லாது இல்லை வாழ்க்கை!
வலியின்றி வெற்றிகள் இல்லை!
 
 
நீ எனது வலி,

இந்த வலி எனக்கு வலிமையைக் கொடுக்கும் என்றல்லவே
நீ புன்னகை பூக்கின்றாய்!
புன்னகைப் பூவே, நீ புன்னகைத்தது குற்றமல்ல!
இந்த வலி எனக்கு வலிமை தரும்!
வெற்றிகளுக்கு வழி வகுக்கும்,
வாழ்க்கை என்பது ஒரு பயணம்,
இந்த பயணத்தில் நான் ஒரு பயணி.
 
இறைவ, எனது அடுத்த பயணம் இனிமையுடன் இருக்க நீ வரம் தருவாய்!


காற்று இனிது அடிக்கட்டும்!!!

3 comments:

  1. அன்பு நண்பரே,
    தங்களுக்குள் ஒளிந்து இருக்கும் கவித்துவம் குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


    நீ வலிக்கு கூட வலிக்க கூடாது (இனிமையானது) என்று வர்ணிக்கும் அழகு உந்தன் பெருந்தன்மையை காட்டுகிறது.
    ஆனால் என் கருத்தோ வலி அனுபவிக்கும் கணம் ஒருபோதும் இனிமையாக வாய்ப்பில்லை.


    அன்புடன்
    வீரா

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்ப,

      தங்களின் வலி (கவிதை) மிகவும் அருமை!!!

      நீ படைத்த ஒரு முழு கவிதை புத்தகம் தவறுதலாக தடம் மாறி காணமல் போனாலும், உன்னுள் இருக்கும் கவிதை ஊற்று எப்போதுமே அழிவதற்கு வாய்ப்பே இல்லை!!!

      தாங்கள் படைத்திருப்பது போல் வலி இனிமையானதே....

      தாயின் வலி குழந்தை நன்றாக பிறக்கும்போது!

      குழந்தையின் வலி நன்றாக நடக்கும்போது!

      மாணவனின் வலி நல்ல மதிபெண்ணாக மாறும்போது!

      தந்தையின் வலி மகன் சான்றோனாக வளரும்போது!

      விவசாயியின் வலி நல்ல விளைச்சல் கிடைக்கும்போது!

      தேசபக்தனின் வலி நாடு சிறக்கும்போது!

      பொறியாளனின் வலி சாதனை படிக்கும்போது!

      நீ சாதனை படைத்தது விட்டாய் நண்பா சந்தேகமே இல்லை வலி இனிமையானதே!!!!

      ப்ரியமுடன்,
      விமலாதித்தன்.சு

      Delete
  2. அருமையான கவிதை சகோதரரே!

    ReplyDelete