எல்லாம் கடந்து போகும்!
வாழ்க்கை என்பது என்னவோ,
எல்லாவற்றையும் கடந்து செல்வது தான்,
நாம் செல்லும் வழியில்,
நம் மனது எல்லாவற்றையும் பதிவு செய்வதில்லை!
நமக்கு பிடித்த சிற்சில நிகழ்வுகளை நம் மனது பதிவு செய்கின்றது!
நம்மோடு வந்த சிறு வயது தோழன்,
நம்மோடு இருந்த நமக்கு பிடித்த பொருட்கள்,
நாம் படித்த பள்ளி நாட்கள்,
நாம் சென்று வந்த இடம்,
இவை அனைத்தும் கடந்து போனது!
நம்முடைய கனவுகள்,
இலட்சியங்கள்,
இவையெல்லாம் வாழ்க்கை பாதையில்
அதனதன் ஓட்டத்தில் கடந்தே போனது!
நம்முடைய வெற்றிகள்,
நமது இலக்குகள்
இவையெல்லாம் மாறியே போனது,
காலத்தின் சுழற்சியில்!
சுனாமியும்,
சுள்ளென்ற வெயிலும்,
இதமான தென்றலும்,
குளிர் மழையும்,
புழுதிப்புயலும்,
எப்பொழுதும் நம் நினைவில் நிற்பது இல்லையே!
எங்கே சென்றது இவையெல்லாம்?
நம்மை கடந்தே சென்றது!
எப்படி இருக்கின்றது இந்த கடந்து போவது?
நிலையாய் நாம் இருப்பதில்லையே,
நாம் பயணிக்கின்றோம்,
உற்று நோக்குவதில்லை!
எல்லாவற்றையும் கடந்தே செல்கின்றோம்,
ஏனென்றால் நின்று பார்ப்பதில்,
எங்கே நின்றே விடுவோம் என்ற பயம்!
நேற்றும் கடந்து போனது,
இன்றும் கடந்து போகும்,
நாளையும் கூட...
ஆனால் ஆழ் நெஞ்சத்து நினைவுகள்,
நம்மை கடப்பதில்லை!
அஃது பதிவு செய்யப்படுகின்றது!
அந்த நிகழ்வுகள் நம்மை விட்டு மறைவதில்லை,
நாம் மறையும் பொழுது அதுவும் மறையும்,
இதுவே எல்லாம் கடந்து போகும்!
No comments:
Post a Comment