Friday, 17 June 2011

விடியலை நோக்கி!

Year 1998, I penned this for one of my friend in Tamil. I feel that it is good to be published in my blog. And I am publishing in Tamil itself. So those who doesn't follow Tamil, I would love to translate in English soon...

பிரியமுள்ள நண்பரே!

நீங்கள் பண்புள்ளவரா

அன்புள்ளம் கொண்டவரா

திறமையின் உறைவிடமா

அல்லது

மானிடத்திற்கு எடுத்துக்காட்டா...

நட்பு, பேதம் பார்த்து வருவதில்லை

அஃது,

மனிதனின் தன்னம்பிக்கையைப் பொறுத்து வருகின்றது நண்பரே!


தளர்ந்து விடாதீர்கள்,

காலங்கள் கழியலாம்

உங்களின் கோலம் மாறலாம்

உற்றார் உறவினர் மாறலாம்

என்றும்

நிலையாய் இருக்க வேண்டியது

உங்களின் தன்னம்பிக்கை நண்பரே!
 
நண்பரே,


ஈடு உண்டு உலகில் அனைத்திற்கும்

இன்று இந்த சூரியன் இல்லாவிடின்

நிச்சயம் உண்டு வேறொரு விடியல்

மனிதன் வாழ உறுதி வேண்டும்

அஃது

மனஉறுதி

அதுவே ஆக வேண்டும் நமது சுருதி

பெருக வேண்டும் குருதியில் நம்பிக்கை

உமது நாளங்களில் அஃது பெருக்கெடுத்துப் பாயவேண்டும்!
 
நண்பரே,


கூன் போலாகாதீர்கள்

தூனாகுங்கள்

உயருங்கள், உயர்த்தி விடுங்கள்

காலம் பதில் சொல்லும்

நாளை என்பது நிச்சயம்

இதுவே தன்னம்பிக்கை!

நாளை பார்க்கலாம் நண்பரே உங்களை

இது என்னுடைய பலம்

உங்களுடைய பலம் உங்களிடத்தில்

விடைபெறுகின்றேன் நண்பரே

விடியலை நோக்கி!

No comments:

Post a Comment